ECONOMY

இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன முன்னாள் அமைச்சர் பலி

1 ஜனவரி 2024, 2:20 AM
இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன முன்னாள் அமைச்சர் பலி

காஸா, ஜன 1-   மத்திய காஸா பகுதியில்   உள்ள அல்-மகாசி அகதிகள் முகாமில் உள்ள  வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில்  பாலஸ்தீனத்தின் முன்னாள் வக்ஃப் மற்றும் மத விவகாரங்களுக்கான  அமைச்சர் ஷேக் யூசுப் சலாமா கொல்லப்பட்டார்.

அல்-அக்ஸா பள்ளிவாசலில் சமயப்  போதகராக  இருக்கும் ஷேக் யூசுப்பின் இல்லத்தை இஸ்ரேலிய போர் விமானங்கள் குறிவைத்து தாக்கியதாவும் இதன் விளைவாக அவர் உயிரிழந்ததோடு  அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன செய்தி நிறுவனத்தின் (வாஃபா) நிருபர் கூறினார்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலில் 21,650 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 56,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் சிறார்கள்  மற்றும் பெண்களாவர். மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை இன்னும் காணவில்லை.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.