ECONOMY

புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பதிப்பு டிக்கெட்டை ஷா ஆலம் தாவரவியல் பூங்கா வழங்குகிறது

31 டிசம்பர் 2023, 3:54 AM
புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பதிப்பு டிக்கெட்டை ஷா ஆலம் தாவரவியல் பூங்கா வழங்குகிறது

ஷா ஆலம், டிச 31- புத்தாண்டை முன்னிட்டு  ஷா ஆலம் தேசிய தாவரவியல் பூங்கா (தாமான் பொட்டானி நெகாரா)  சிறப்பு பதிப்பு டிக்கெட்டை அறிமுகம் செய்கிறது.

புத்தக அடையாளக் குறியீடாகவும் பயன்படுத்தக்கூடிய  தாவரவியல் கருப்பொருளுடன் கூடிய இந்த  டிக்கெட்டுகளை நாளை ஜனவரி 1ஆம் தேதி முதல் தாவரவியல் பூங்கா முகப்பிடங்களில் வாங்கலாம்.

உள்நாட்டைச் சேர்ந்த  பெரியவர்கள் மற்றும் சிறார்களுக்கு  3.00 வெள்ளி கட்டணத்திலும் வெளிநாட்டினருக்கு  5.00 வெள்ளி கட்டணத்திலும் இந்த டிக்கெட்  விற்கப்படுகிறது.

ஷா ஆலம் தாவரவியல் பூங்காவில் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையுடன் 2024 புத்தாண்டைத் தொடங்குவோம் என்று தனது முகநூல் பதிவில் அப்பூங்கா நிர்வாகம்  தெரிவித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.