NATIONAL

சபா மாநிலம் வெள்ள பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டது

29 டிசம்பர் 2023, 2:24 AM
சபா மாநிலம் வெள்ள பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டது

கோத்தா கினபாலு, டிச 29 - சபா மாநிலத்தில் வெள்ள நிலைமை சீரடைந்து

வருகிறது. பைத்தான் மாவட்டத்தில் உள்ள நிவாரண மையத்தில்

தங்கியிருந்த கடைசி மூன்று குடும்பங்களைச் சேர்ந்த அறுவர் வீடு திரும்ப

அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இம்மாநிலம் வெள்ள பாதிப்பிலிருந்து

முழுமையாக விடுபட்டதாக அறிவிக்கப்பட்டது.

பாமோல் தேசிய இடைநிலைப் பள்ளியில் செயல்பட்டு வந்த கடைசி

தற்காலிக நிவாரண மையமும் நேற்று மூடப்பட்டதாக மாநிலப் பேரிடர்

மேலாண்மை செயல்குழு செயலகம் கூறியது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் அல்லது

உயிருடற் சேதம் நிகழ்ந்ததாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. மீட்பு

பணியில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நாங்கள் நன்றி

தெரிவித்துக் கொள்கிறோம் என்று அச்செயலகம் அறிக்கை ஒன்றில்

தெரிவித்த து.

தொடர்ச்சியாகப் பெய்த கனத்த மழையின் காரணமாகச் சண்டகான் மற்றும்

பைத்தான் ஆகிய மாவட்டங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை வெள்ளம்

ஏற்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.