கிளந்தான், பகாங், சிலாங்கூர் மற்றும் திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110 ஒலிபரப்பு நிலையங்களில் 24இல் ஏற்பட்டிருந்த நெட்வொர்க் சிக்கல்கள் இன்று காலை 10 மணிக்கு தீர்க்கப்பட்டன.
இன்னும் செயல்படாத மீதமுள்ள 86 நிலையங்களுக்கான தீர்வுகளை, சேவை வழங்குனர்களின் நெருங்கிய ஒத்துழை வழங்கியதன் மூலம் உடனடியாக தீர்க்கும் முயற்சியில் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷனின் (MCMC) நான்கு மாநில அலுவலகங்கள் ஈடுபட்டுள்ளன.
“கிளந்தான், பகாங், சிலாங்கூர் மற்றும் திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்சிஎம்சி அனுதாபம் தெரிவித்துள்ளது.
"இந்த கஷ்டமான சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட தனிநபர்கள் தங்கள் குடும்பங்களுடன் தொடர்பு கொள்வதில் தொலைத்தொடர்புகளின் இன்றியமையாத பங்கை எம்சிஎம்சி உணர்கிறது," என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள நெட்வொர்க் சிக்கல்களுக்கான உதவிக்கு, பொதுமக்கள் எம்சிஎம்சியின் தொடர்புகளை அணுகலாம்.
அவை
கிளந்தான்: யுசானி முகமட் யூசாஃப் 09-7454828 அல்லது yuzani.yusoff@mcmc.gov.my
பகாங்: முகமட் ரஸ்லான் ராணி 09-5154825 அல்லது mohd.razlan@mcmc.gov.my
சிலாங்கூர்: முஹமட் ஜஃப்லூஸ் பஹாருடின் 03-86887403 அல்லது muhammad.jaflus@mcmc.gov.my
திரங்கானு: அஹ்மட் பைஹாகி ஜின்பஹர் 09-6288029 அல்லது baihaqi.zinba@mcmc.gov.my
“எம்சிஎம்சி மற்ற மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
"தகவல்களை பகிர்வதற்கு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்கள் தேவை. இந்த இன்னல்களை ஒன்றாகச் சமாளிக்க மலேசியர்களாக ஒன்றிணைவோம், ”என்று அது கூறியது.
- பெர்னாமா




