NATIONAL

400,000 வெள்ளி மோசடி- நிறுவன குமாஸ்தாவுக்கு எதிராக நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு

28 டிசம்பர் 2023, 7:51 AM
400,000 வெள்ளி மோசடி- நிறுவன குமாஸ்தாவுக்கு எதிராக நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு

ஜோர்ஜ் டவுன், டிச 28- கடந்த 2019 முதல் 2021 வரை நிறுவனம்

ஒன்றுக்குச் சொந்தமான 445,815 வெள்ளியை நம்பிக்கை மோசடி

செய்ததாக அந்நிறுவனத்தின் கணக்கியல் குமாஸ்தாவுக்கு எதிராக 133

குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

தனக்கெதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட

குற்றச்சாட்டுகளை தே யா லிங் (வயது 41) என்ற அந்த நபர் மறுத்து

விசாரணை கோரினார்.

தங்கத்தின் அசல் தன்மையைக் சோதனையிடும் அந்த நிறுவனத்திற்குச்

சொந்தமான அப்பணத்தை கடந்த 2019 அக்டோபர் முதல் 2021 மே 31 வரை

கைமாற்றியதாகத் தே யா லிங்கிற்கு எதிரான குற்றப்பத்திரிகையில்

குறிப்பிடப்பட்டுள்ளது.

தீமோர் லாவுட் மாவட்டத்தில் உள்ள ஜாலான் சுங்கையில் இக்குற்றத்தைப்

புரிந்ததாக அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு முதல் 14 ஆண்டு

வரையிலான சிறைத்தண்டனை, மற்றும் அபராதம் விதிக்க வகை

செய்யும் தண்டனைச் சட்டத்தின் 408வது பிரிவின் கீழ் அவர் மீது

குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது,

குற்றஞ்சாட்டப்பட்டவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் 100,000

வெள்ளி ஜாமீனில் விடுவிக்கவும் அவரின் அனைத்துலக கடப்பிதழை

பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும என்று அரசுத்

தரப்பு வழக்கறிஞர் லீ ஜூன் கியோங் நீதிமன்றத்தைக் கேட்டுக்

கொண்டார்.

மாதம் 2,800 வெள்ளி சம்பளம் பெறும் தனது கட்சிக்காரர் 81 வயது

தந்தையைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளதால் ஜாமீன் தொகையை 20,000 வெள்ளியாக நிர்ணயிக்கும்படி தே யா லிங்கின் வழக்கறிஞர்

நீதிபதியிடம் விண்ணப்பித்தார்.

எனினும், அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் 66,50 வெள்ளி ஜாமீன்

தொகையை நிர்ணயித்த நீதிபதி ஷர்மிளா அப்துல் சமாட், வழக்கின்

அடுத்த விசாரணையை எதிர்வரும் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதிக்கு ஒத்தி

வைத்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.