NATIONAL

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

28 டிசம்பர் 2023, 3:49 AM
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

கோலா திரங்கானு, டிச.28: நேற்று மதியம் இங்குள்ள சுங்கை தோக் ஹக்கீமில் 11 வயது சிறுவன் தனது சகோதரர் மற்றும் நண்பருடன் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போனவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

முகமட் ஹராஸ் இல்மான் முகமட் சியாஹ்ரில் ரெடுவான் மாலை 4.46 மணியளவில் காணாமல் போனது குறித்து பொது மக்களிடமிருந்து தனது தரப்புக்கு அழைப்பு வந்ததாக கோலா திரங்கானு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ரோசிசா அப்னி ஹஜர் கூறினார்.

நீர் மீட்புக் குழுவின் (பிபிடிஏ) ஆறு பேர் உட்பட மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) மொத்தம் 19 உறுப்பினர்கள் தேடல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) நடவடிக்கைகளுக்காகச் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.

"பாதிக்கப்பட்டவர் தனது ஒன்பது வயது இளைய சகோதரர் முகமட் ஃபிராஸ் வாஃபி மற்றும் நண்பருடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.

"முகமட் ஃபிராஸ் வஃபியும் அச்சிறுவனின் நண்பரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். ஆனால் வலுவான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனைப் பொதுமக்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் தீயணைப்புத் துறையைத் தொடர்பு கொண்டனர்" என்று அவர் சம்பவம் நடந்த இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

மீட்பு நடவடிக்கை ஐந்து இயந்திரங்கள் மற்றும் ஒரு படகுடன் மாலை 5 மணிக்கு தொடங்கியது என்றும் ரோசிசா கூறினார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.