NATIONAL

பேத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 70 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு

27 டிசம்பர் 2023, 11:56 AM
பேத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 70 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், டிச. 27 - நான்கு மாதங்களுக்கு முன்பு தனது இளம் வயது பேத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 70 வயது முதியவர் ஒருவர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வாண்டு ஆகஸ்ட் மத்தியில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இங்குள்ள பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள ஓர் இல்லத்தில், 15 வயதுடைய சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) இன் கீழ் சேர்க்கப்பட்ட இந்த குற்றச்சாட்டு, அதே சட்டப் பிரிவு 16(1) உடன் படிக்கப்படுகிறது.

அந்த நபர் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி மற்றும் பிரிவு 16 (1)க்குக் கூடுதல் தண்டனையாக, ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் இரண்டு பிரம்படி எதிர்கொள்வார்.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒரு உத்தரவாத்துடன் RM5,000 ஜாமீன் வழங்க நீதிபதி சித்தி அமினா கசாலி அனுமதித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சிகளை மிரட்ட வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்.

அரசு தரப்பில் துணை அரசு வக்கீல் நூர்ஹானி முகமட் அயூப் ஆஜராகினார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகவில்லை.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.