ALAM SEKITAR & CUACA

ஆற்றின் முகத்துவாரத்தில் விழுந்த இரண்டு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

26 டிசம்பர் 2023, 7:31 AM
ஆற்றின் முகத்துவாரத்தில் விழுந்த இரண்டு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

தவாவ், டிச.26: இங்குள்ள கம்போங் குர்னியா ஜெயாவில் நேற்று மதியம் வீட்டின் பின்புறம் உள்ள ஆற்றில் விழுந்த மூழ்கி உயிரிழந்த இரண்டு வயது சிறுவனின் சடலம், இன்று காலை 6.45 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.

அத்வா இமான் முஹம்மது இஸ்வானின் சடலம், என்ற    பாதிக்கப்பட்டவர் காணாமல் போனதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில்  பொதுமக்களால் கண்டுபிடிக்கப் பட்டது என்று தவாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ஜெமிஷின் உஜின் கூரினார்.

"பாதிக்கப்பட்டவர் அந்த இடத்தில் போலீசாரால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது மற்றும் மேல் நடவடிக்கைக்காக வழக்கு காவல்துறையிடம் ஒப்படைக்க பட்டது. காலை 7.40 மணிக்கு  தேடும் நடவடிக்கைகள் முடிந்தது," என்று அவர் இன்று இங்கு செய்தியாளர்களை தொடர்பு கொண்டபோது கூறினார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவன் ஆற்றின் முகத்துவாரத்தில் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.