ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர், கேஎல் மற்றும் புத்ராஜெயாவில் மாலை 6 மணி வரை கனமழை எச்சரிக்கை

26 டிசம்பர் 2023, 6:59 AM
சிலாங்கூர், கேஎல் மற்றும் புத்ராஜெயாவில் மாலை 6 மணி வரை கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், டிச 26: இன்று மாலை 6 மணி வரை சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

மெட் மலேசியாவின் முகநூல் பதிவுபடி, பேராக், பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர், சரவாக் மற்றும் சபாவில் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டருக்கு  அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் என எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும். சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.