ECONOMY

கணவன் மரணம், மனைவி படுகாயம் யானைகள் அட்டகாசம்

26 டிசம்பர் 2023, 6:27 AM
கணவன் மரணம், மனைவி படுகாயம் யானைகள் அட்டகாசம்

ஷா ஆலம், டிச.26: லஹாட் டத்து அருகே உள்ள கம்போங் பெர்பாடுவானில் நேற்று இரவு நடந்த சம்பவத்தில் யானை கூட்டம் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார் அவரது மனைவி கடுமையாகத் காயமுற்றார்.

இரவு 10 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 90 வயதுடைய லோபிஸ் ஜூபின், சம்பவ இடத்திலேயே இறந்தார். 61 வயதான அவரது மனைவி டலாமா ஹமீத், பலத்த காயமடைந்து, இப்போது லஹாட் டத்தோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பெரித்தா  ஹரியான் தெரிவித்தது.

தங்கள் தோட்டத்தை பராமரிப்பதற்காக ஒரு குடிசையில் இருந்த கணவனும் மனைவியும், 12 யானைகள் கொண்ட  கூட்டத்தை கண்டு ஒதுங்க முற்படுவதற்கு முன்னர்  யானைகள் தாக்கியதாக , அச்சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.யானைகளில் ஒன்று அவர்களைத் துரத்தித் தாக்கியதுடன் உதைத்தும் மிதித்ததும் உள்ளது.

பாதிக்கப்பட்டவரின் உடல் லஹாட் டத்து மருத்துவமனையில் தடயவியல் துறைக்கு மேல் நடவடிக்கைக்காக கொண்டு செல்லப்பட்டது, மேலும் இந்த சம்பவத்தை லாஹாட் டத்து மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் டாக்டர் ரோஹன் ஷா அஹமட் உறுதிப்படுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.