ECONOMY

மாமன்னர் தம்பதியினர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

24 டிசம்பர் 2023, 1:41 PM
மாமன்னர் தம்பதியினர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

கோலாலம்பூர், 24 டிச: மாட்சிமை தங்கிய பேரரசர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பில்லா ஷா  மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் மலேசியாவில் உள்ள கிறிஸ்தவ சமூகத்திற்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தேசிய அரண்மனையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இன்று பதிவேற்றம் செய்யப்பட்ட செய்தியின் மூலம் மாட்சிமை தங்கிய  அவர்களின்  வாழ்த்து வெளியிடப் பட்டுள்ளது.

“இந்தப் பண்டிகை மலேசியாவில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சமூகங்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வைக் கொண்டு வரட்டும்” என்று இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.