ECONOMY

கோத்தா கெமுனிங் தொகுதியின் கிறிஸ்துமஸ்/புத்தாண்டு  பொது உபசரிப்பு- ஜனவரி 1ஆம் தேதி நடைபெறும்

22 டிசம்பர் 2023, 11:34 AM
கோத்தா கெமுனிங் தொகுதியின் கிறிஸ்துமஸ்/புத்தாண்டு  பொது உபசரிப்பு- ஜனவரி 1ஆம் தேதி நடைபெறும்

ஷா ஆலம், டிச 22- கோத்தா கெமுனிங்  தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டிலான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் வரும் ஜனவரி 1ஆம் தேதி கெமுனிங் உத்தாமா, எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

செவிக்கினிய இசை நிகழ்ச்சி, அதிர்ஷ்டக் குலுக்கு உள்பட பல்வேறு சுவாரஸ்யமான அங்கங்களை உள்ளடக்கிய தேநீர் விருந்துடன் கூடிய  இந்த நிகழ்வு மாலை 3.00 மணி தொடங்கி 6.30 மணி வரை நடைபெறும்.

கிறிஸ்துமஸ் பெருநாள் மகிழ்ச்சியை தொகுதி மக்களோடு பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில் புத்தாண்டை புதிய நம்பிக்கையுடன் வரவேற்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த உபசரிப்பு நிகழ்வுக்கு   ஷா ஆலம் கிறிஸ்டியன் ஃபெலோஷிப் அமைப்பு ஏற்பாட்டு ஆதரவை வழங்கியுள்ளது.

மிகச் சிறப்பான முறையி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் தொகுதி மக்கள் திரளாக கலந்த சிறப்புக்குமாறு கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் கேட்டுக் கொள்கிறார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.