ALAM SEKITAR & CUACA

பாசீர் மாஸ் மாவட்டத்தில் 2,149 பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம்

22 டிசம்பர் 2023, 5:06 AM
பாசீர் மாஸ் மாவட்டத்தில் 2,149 பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம்

கோத்தா பாரு, டிச 22- இன்று காலை 9.00 மணி நிலவரப்படி பாசீர் மாஸ் மாவட்டத்தில் உள்ள வெள்ள துயர் துடைப்பு மையங்களில் 665 குடும்பங்களைச் சேர்ந்த 2,149 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.

நேற்றிரவு இந்த எண்ணிக்கை 729 குடும்பங்களைச் சேர்ந்த 2,316 பேராக இருந்ததாக கிளந்தான் மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் கூறியது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் குவாங் திங்கி தேசியப் பள்ளி, குவால் தோ டே தேசியப் பள்ளி, குவால் பெரியோக் தேசியப் பள்ளி, பாரோ பியால் தேசியப் பள்ளி, கெடாங் தஞ்சோங் தேசியப் பள்ளி, பாடாங் லிச்சின் பள்ளிவாசல், ஸ்ரீ கியாம்பாங் தேசியப் பள்ளி, பொஹோன் பூலோ தேசியப் பள்ளி ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

 

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.