NATIONAL

தாமான் வாவாசானில்  மண்சரிவு இரும்பு தடுப்பு  பொருத்தும் பணி மூன்று முதல் நான்கு நாட்களில் முடிவடையும் 

20 டிசம்பர் 2023, 12:55 PM
தாமான் வாவாசானில்  மண்சரிவு இரும்பு தடுப்பு  பொருத்தும் பணி மூன்று முதல் நான்கு நாட்களில் முடிவடையும் 

பூச்சோங், டிச.20: ஜாலான் வாவாசான், தாமான் வாவாசானில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மண் சரிவை கட்டுப்படுத்த இரும்பு  தடுப்பு பொருத்தும் பணி மூன்று முதல் நான்கு நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி, 375 இருப்புகளில் 121 பொருத்தப்பட்டு விட்டன என சுபாங் ஜெயா மாநகராட்சி தலைவர் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.

"இரும்புகள் பொருத்தும் பணி முடிந்ததும், சாலை தடுப்பை அசல் நிலைக்கு மீட்டெடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பின்னர், சாலை மேம்படுத்தும் பணி தொடரும்," என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை கனிம வளம் மற்றும் புவி அறிவியல் துறையின் கீழ் உள்ளது என்றார்.

இதற்கிடையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சில காவல் துறையினரும் தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.