NATIONAL

புதிய செடான் ரகக் கார்களுக்கு 4,000 முன்பதிவுகளைப் புரோட்டோன் பெற்றது

20 டிசம்பர் 2023, 8:30 AM
புதிய செடான் ரகக் கார்களுக்கு 4,000 முன்பதிவுகளைப் புரோட்டோன் பெற்றது

கூச்சிங், டிச 20 - தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டான் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்70 காம்பாக்ட் செடான்  ரகக் கார்களுக்கு இதுவரை 4,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளது.

இந்த புதிய ரகம்  மீது  வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை இந்த அபரிமிதமான ஆதரவு பிரதிபலிக்கிறது என்று  புரோட்டான் துணை தலைமை நிர்வாக அதிகாரி ரோஸ்லான் அப்துல்லா கூறினார்.

புரோட்டான் எக்ஸ்50, எக்ஸ்70 மற்றும் எக்ஸ் 90 போன்ற மாடல்களுடன் எஸ்.யு. வி. பயன்பாட்டு வாகனப் பிரிவில் தலைமைத்துவத்தை நிறுவிய பிறகு, நாங்கள் இப்போது எங்கள் தொழில்நுட்ப வல்லமையை ஒரு புதிய குடும்ப செடான் ரகத்திற்கு  கொண்டு வருகிறோம்.

கடந்த வாரம், புரோட்டான் எஸ்70 சபாவில் அறிமுகமானது. இப்போது, ​​சரவாக்கின் அழகிய பிராந்தியத்திற்கு  விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று அவர் இன்று புரோட்டான் எஸ்70 சரவாக் அறிமுக நிகழ்வின் போது கூறினார்.

புரோட்டோன் நிறுவனம் கடந்த நவம்பர் 28ஆம் தேதி புரோட்டான் எஸ்70 காம்பாக்ட் செடான் காரை அறிமுகப்படுத்தியது. முதல் ஆண்டில் ஒரு மாதத்திற்கு 3,000க்கும்  மேல் வாகன விற்பனையை பதிவு செய்ய அது இலக்கு வைத்துள்ளது.

இந்த எக்ஸ்70 ரகக் கார், 1.5 லிட்டர் டர்போ எஸ்70, எக்ஸிகியூட்டிவ், பிரீமியம், ஃபிளாக்ஷிப் மற்றும் ஃபிளாக்ஷிப் எக்ஸ் என நான்கு பிரிவுகளில் வெளி வருகிறது என்று தலைமை நிர்வாக அதிகாரி லி சுன்ராங் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.