கோலாலம்பூர், டிச 20 - இங்குள்ள புடு, இலகு ரயில் தடத்தில் நேற்று அத்துமீறி நுழைந்து தண்டவாளத்தை கடந்ததற்காக ஆடவர் ஒருவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 300 வெள்ளி அபராதம் விதித்தது.
இம்மாதம் 18ஆம் தேதி மாலை 6.47 மணிக்கு இங்குள்ள புடு எல்.ஆர்.டி. நிலையத்தின் பிளாட்பாரத்தில் இக்குற்றத்தைப் புர்ந்ததைத் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து பெனார்ட் சுவா (வயது 20) என்ற அந்த இளைஞருக்கு மாஜிஸ்திரேட் இல்லி மரிஸ்கா கலிசான் இத்தண்டனையை விதித்தார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 447 இன் கீழ் அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இச்சட்டப் பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 1,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
அபராதத்தை செலுத்த தவறினால் 7 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர் அபராதத்




