NATIONAL

சிலாங்கூரில் 14 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்

19 டிசம்பர் 2023, 5:10 AM
சிலாங்கூரில் 14 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்

ஷா ஆலம், டிச 19: காலை 7.30 மணி நிலவரப்படி, மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது என மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் (ஏபிஎம்) சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்தது.

கோலா சிலாங்கூரில் உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா தேசியப் பள்ளியின் தற்காலிகத் தங்கும் மையத்தில் (பிபிஎஸ்) ஐந்து குடும்பங்கள் தஞ்சம் புகுந்துள்ளதாகச் செயலகம் கூறியது.

சுங்கை கிள்ளான் முகத்துவாரத்தில்  நீர்மட்டம் இன்று காலை 9.30 நிலவரப்படி எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளதாக (2.46 மீட்டர்) publicinfobanjir.water.gov.my என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

மேலும், புக்கிட் சாங்காங், கோலா லங்காட்டில் உள்ள சுங்கை லங்காட் எச்சரிக்கை அளவான   3.55 மீட்டர் நீர் மட்டத்தில் உள்ளது. ஆனால் தற்போது குறையும் போக்கைப் பதிவு செய்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.