ஷா ஆலம், டிச 19: அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் கோவிட்-19 நோய்த் தொற்றின் பரவலைக் கையாள்வதில் சுகாதார அமைச்சின் பரிந்துரைகளைப் பின்பற்ற (HEIs) ஊக்குவிக்கப் படுகின்றன.
இதில் இணையக் கற்றல் அல்லது தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் அடங்கும் என உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் கூறினார்.
பல்கலைக்கழகம் எடுக்கும் எந்த நடவடிக்கையும் சுகாதார அமைச்சு பின்பற்றும் வகையில் இருக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்ததாக குறிப்பிட்ட உயர் கல்வி அமைச்சர். சுகாதார அமைச்சின் ஆலோசனை இன்றி நாம் சொந்த முடிவுகளையும் எடுக்க முடியாது என்றார்..
"தடுப்பூசியின் அவசியம் குறித்து நாங்கள் சுகாதார அமைச்சகத்தைச் சார்ந்துள்ளோம்," என்று அவர் நேற்று, யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாராவில் (யுஐடிஎம்) உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையிலான (ஐபிடி) 2023 பேச்சுப் போட்டியில் சந்தித்தபோது கூறினார்.
கடந்த வாரத்தில் 12,757 சம்பவங்கள் மட்டுமே இருந்த நிலையில், டிசம்பர் 10 முதல் 16 வரையிலான காலகட்டத்தில் கோவிட்-19 இன் பரவல் நாடு முழுவதும் 20,696 ஆக அதிகரித்துள்ளது.
மக்கள் குறிப்பாக அதிகம் பாதிக்கப்படக்கூடிய மற்றும் அதிக ஆபத்து குட்பட்ட குழுக்கள் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்று கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது பரிந்துரைத்தார் என கூறினார்.




