ஷா ஆலம், டிச 19: டிசம்பர் 10 முதல் 16 வரையிலான 50வது தொற்றுநோயியல்
வாரத்தில் (ME) மொத்தம் 20,696 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 62.2 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சுகாதார
அமைச்சர் கூறினார்.
அவை 20,677 உள்ளூர் சம்பவங்கள் (97.1 சதவீதம் - மலேசிய குடிமக்கள்), 609 உள்ளூர்
சம்பவங்கள் (2.9 சதவீதம் – வெளிநாட்டவர்கள்), 18 மலேசியர்கள் சம்பந்தப்பட்ட 19
இறக்குமதி சம்பவங்கள் ஆகும் என டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது
கூறினார்.
பெரும்பாலானவை வகை ஒன்று (அறிகுறிகள் இல்லை) மற்றும் இரண்டு (மிதமான
அறிகுறிகள்) ஆகும். மொத்தம் 151 சம்பவங்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ICU)
சிகிச்சை தேவைப்பட்டது.
சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, என்று அவர் புத்ரா ஜெயாவில் நடைபெற்ற
செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும் கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பை எதிர்கொள்ள தயாராகி வருவதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது
கூறினார்.
தடுப்பூசி இன்னும் பெறாதவர்களுக்கு, பூஸ்டர் டோஸ் பெற விரும்புபவர்களுக்கும்
கையிருப்பு போதுமானதாக உள்ளது, என்று அவர் கூறினார்.
பூஸ்டர் தடுப்பூசி பெற விரும்புவோர் நேரடியாக வரலாம் ''வாக்-இன்''' செய்யலாம் அல்லது சுகாதார கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் சந்திப்பை மேற்கொள்ளலாம் என்று அவர் கூறினார்.




