கோலாலம்பூர், டிச.18 - கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வரும் டிசம்பர் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் நன்நடத்தை மறுவாழ்வு மையங்கள், சிறப்பு மறுவாழ்வு மையங்கள், சிறப்பு தடுப்பு மையங்கள் மற்றும் ஹென்றி கர்னி பள்ளி ஆகியவற்றில் உள்ள கைதிகளைச் சந்திக்க அவர்களின் குடும்பத்தினர் சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
நேரடி அல்லது இணைய சந்திப்புகளை நடத்த கிறிஸ்தவ கைதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
நேரடி சந்திப்பு முறையைத் தேர்ந்தெடுக்கும் குடும்பங்களுக்கு வருகை நேரம் காலை 8.15 முதல் மாலை 4.15 வரை ஆகும். .இணைய சந்திப்பு முறை டிசம்பர் 29 முதல் டிசம்பர் 31 வரை மேற்கொள்ளப்படும்.
நேரடி சந்திப்பு முறையைத் தேர்ந்தெடுக்கும் குடும்பங்கள் RT-PCR அல்லது ARTK-Ag சோதனை செய்ய வேண்டும். சோதனையின் மாதிரி பெறப்பட்ட மூன்று நாட்களுக்கு இது அமலில் இருக்கும். அவர்கள் வருகை கார்டு தவிர்த்து அடையாளக் கார்டையும் உடன் கொண்டு வர வேண்டும் என்று அத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பார்வையாளர்கள் கைதிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கைதியும் அவர்களது குடும்பத்தினரை ஒரு முறை மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். i-Visit அமைப்பு மூலம் www.prison.gov.my, என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல் மூலம் தங்கள் வருகையை சம்பந்தப்பட்ட தரப்பிடம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.




