NATIONAL

காணாமல் போன 14 வயது இளைஞன் சடலமாக மீட்பு

18 டிசம்பர் 2023, 6:09 AM
காணாமல் போன 14 வயது இளைஞன் சடலமாக மீட்பு

குவாந்தான், டிச.18: கடந்த வெள்ளிக்கிழமை பேர்கம்போங்கான் இன்டேரா செம்பூர்ணாவில் உள்ள கால்வாயில்  குளித்து கொண்டிருக்கும் போது காணாமல் போனதாகக் கூறப்படும் 14 வயது இளைஞன் நேற்று காலை இறந்து நிலையில் கண்டெடுக்கப் பட்டான்.

முகமட் அமிருல் ஹைகல் சே ஜாபாவின் உடல், காணாமல் போனதாக கூறப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1.6 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப் பட்டதாக பகாங் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) மக்கள் தொடர்பு அதிகாரி சுல்பட்லி ஜகாரியா கூறினார்.

“காலை 10.22 மணியளவில் நீர் மீட்புக் குழு (பிபிடிஏ) சடலத்தைக் கண்டுபிடித்து மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைத்தது” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இங்குள்ள மாட் கிலாவ் இடைநிலைப் பள்ளியில் (எஸ்எம்கே) படித்து வரும் முகமட் அமிருல் ஹைகல், வெள்ளிக்கிழமை மாலை 3.50 மணி அளவில் ஆறு நண்பர்களுடன் தனது வீட்டின் அருகே உள்ள கால்வாயில்  குளித்துக் கொண்டிருக்கும் சமயம் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.

தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை வெள்ளிக்கிழமை மாலை மற்றும் இரண்டாவது நாளான சனிக்கிழமையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் டென்தி மற்றும் பிரான்கி ஆகிய இரண்டு கண்டறிதல் நாய்களும் (K9) ஈடுபட்டன.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.