NATIONAL

சிலாங்கூர் சூப்பர் லீக்- சிலாங்கூர் எஃப்.சி. 3-1 கோல் கணக்கில் பி.டி.ஆர்.எம். எஃப்.சி. குழுவை வென்றது

18 டிசம்பர் 2023, 3:40 AM
சிலாங்கூர் சூப்பர் லீக்- சிலாங்கூர் எஃப்.சி. 3-1 கோல் கணக்கில் பி.டி.ஆர்.எம். எஃப்.சி. குழுவை வென்றது

கோலாலம்பூர், டிச 18 - பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பெட்டாலிங் ஜெயா

மாநகர் மன்றத் திடலில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் லீக் ஆட்டத்தில்

சிலாங்கூர் எஃப்.சி. குழு அரச மலேசிய போலீஸ் படையின் பி.டி.ஆர்.எம்.

எஃப்.சி. குழுவை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

முன்னாள் தேசிய கால்பந்து அணியின் பயிற்றுநர் டான் செங் ஹோ

தலைமையிலான சிலாங்கூர் அணி ஆட்டத்தின் 37 மற்றும் 44வது

நிமிடங்களில் இரு கோல்களைப் போட்டு முன்னிலைக்கு வந்தது.

சிலாங்கூரின் முதல் கோலை முன்னணி ஆட்டக்காரர் முகமது பைசால்

அப்துல் ஹலிம் பெனால்டி வழி பெற்ற வேளையில் இரண்டாவது கோல்

பிரண்டென் கான் மூலம் கிடைத்தது.

பி.டி.ஆர்.எம். எஃப்.சி. குழு ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஃபாடி அவாட்

மூலம் கோலை புகுத்தி கோல் இடைவெளியை குறைத்தது. எனினும்,

88வது நிமிடத்தில் சிலாங்கூரின் ரிச்மெண்ட் போகெய் மேலும் ஒரு

கோலை அடித்து மாநில அணிக்கு மூன்று புள்ளிகளை முழுமையாகப்

பெற்றுத் தந்தார்.

இதனிடையே, கோத்தா கினபாலு லீக்காஸ் அரங்கத்தில் நேற்றிரவு

நடைபெற்ற ஆட்டத்தில் சபா குழு கெடா டாருள் அமான் எஃ.ப்.சி. குழுவை

2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2023 சூப்பர் லீக் போட்டியில்

மூன்றாவது இடத்தை பிடித்தது.

சிரம்பான், பாரோய் துவாங்கு அப்துல் ரஹ்மான் அரங்கில் நடைபெற்ற

ஆட்டத்தில் கூச்சிங் எஃப்.சி. குழு நெகிரி செம்பிலான் குழுவை 4-1 என்ற

கோல் கணக்கில் தோற்கடித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.