ANTARABANGSA

பிரதமர் இட்ட பணியை  சிறப்பாக செய்வேன்  டத்தோ ரமணன் திட்ட வட்டம்

17 டிசம்பர் 2023, 1:57 PM
பிரதமர் இட்ட பணியை  சிறப்பாக செய்வேன்  டத்தோ ரமணன் திட்ட வட்டம்
பிரதமர் இட்ட பணியை  சிறப்பாக செய்வேன்  டத்தோ ரமணன் திட்ட வட்டம்

செய்தி. சு.சுப்பையா

கோலாலம்பூர்.டிச.17- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் என் மீது நம்பிக்கை வைத்து துணை அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். அவரது நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்று கூட்டுறவுத் தொழில் முனைவோர் மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ரமணன் தெரிவித்தார்.

மித்ராவின் சார்பில் 800 எஸ்.பி.எம் இந்திய மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கை முடித்து வைத்து டத்தோ ரமணன் உரையாற்றினார். அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின் போது இவ்வாறு கூறினார்.

புதிய அமைச்சரவையில் இந்திய சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டிய  முக்கியத்துவம் கொடுக்கப் படவில்லை என்று பரவலாக பேசப்படுகிறதே என்று கேட்ட போது இது குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் தான் பதிலளிக்க வேண்டும்.

அவர் என் மீது நம்பிக்கை வைத்து மித்ராவை கொடுத்தார். மித்ராவின் வழி சிறப்பாக இந்திய சமுதாயத்திற்கு சேவையாற்றி வருகிறேன். அதே போல் துணை அமைச்சர் பதவியில் சிறப்பாக சேவை ஆற்றுவேன் என்று பதில் அளித்தார்.

மித்ரா மற்றும் துணை அமைச்சர் இரண்டு பதவிகளும் பெரும் சுமையாக இல்லையா என்ற கேள்விக்கு, மித்ராவின் தலைமை அதிகாரியாக ரவிந்திரன் நாயர் சிறப்பாக பணியாற்றுகிறார். மேலும் 28 அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் எனக்கு தோல் கொடுத்து பணியாற்றுகின்றனர். ஆகவே இரண்டு பொறுப்புக்களையும் தொடர்ந்து சிறப்பாக செய்து வருவேன் என்று அவர் பதில் அளித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.