கோலாலம்பூர், டிச 15: இன்று கிளந்தான் மற்றும் திரங்கானுவில் தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பகாங், ஜொகூர் மற்றும் சபாவில் இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை பல பகுதிகளில் தொடர் மழை பெய்யும் என்று மெட் மலேசியா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதில் ரொம்பின் (பகாங்), குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜொகூர் பாரு (ஜொகூர்) ஆகிய இடங்கள் அடங்கும்.
இதற்கிடையில், இதே வானிலைதான் சபாவில் தெலுபிட், பெலூரான், சண்டாக்கான், கூடாட், கோத்தா கினாபாலு, துவரான், ரானாவ், கோத்தா பிலூட் ஆகிய இடங்களிலும் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.
– பெர்னாமா




