ஜொகூர் பாரு, டிச. 15: நேற்று மதியம் தாமான் மோலேக்கில் உள்ள பெட்ரோல்
நிலையத்தின் முன் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், தாங்கள் ஓட்டிச் சென்ற கார்களில்
சிக்கிக் கொண்ட முதாட்டியும் மற்றும் ஓர் இளைஞனும் ஒரு கணம் பதற்றத்தை
எதிர்கொண்டனர்.
இருப்பினும் தீயணைப்பு துறையினர் அவர்களை வெற்றிகரமாக மீட்டனர்.
பிற்பகல் 4.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் 70 வயது மூதட்டி ஓட்டிச் சென்ற
புரோட்டான் சாகா காரும், 17 வயது இளைஞன் ஓட்டிச் சென்ற பிஎம்டபிள்யூ ரக காரும்
வெள்ளத்தில் சிக்கின என்று நடவடிக்கை கமாண்டர் மூத்த தீயணைப்பு அதிகாரி (பிபிகே)
I (கேயுபி) சுஃபியன் முகமட் லிஸ் கூறினார்.
"இச்சம்பவம் தொடர்பாக அழைப்பு வந்தததுடன் ஜொகூர் ஜெயா தீயணைப்பு மற்றும்
மீட்பு நிலையத்திலிருந்து (பிபிபி) மொத்தம் 13 உறுப்பினர்கள் இயந்திரங்களுடன் மற்றும்
அவசர சேவை உதவிப் பிரிவு (ஈஆர்எம்எஸ்) உடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
"தீயணைப்பு துறையினர் பாதிக்கப்பட்ட இருவரையும் பாதுகாப்பான இடத்திற்கு
கொண்டு சென்றனர்," என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தின் போது நீர் முழங்கால் மட்டத்தை எட்டியதாகவும், சுமார் ஒரு மணி
நேரத்திற்குப் பிறகு மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில்,நேற்று பிற்பகல் 4 மணி முதல் தொடர்ந்து பெய்த கனமழையால் நகரைச்
சுற்றி 11 இடங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என ஜொகூர் பாரு
நகராண்மை கழகம் ஒரு சுருக்கமான அறிக்கையின் மூலம் தெரிவித்தது.
– பெர்னாமா




