குவாந்தான், டிச.15: இன்று அதிகாலை கோலா லிப்பிஸ் அருகே பென்ஜோம் என்ற இடத்தில் ஜாலான் லிப்பிஸ்-பெந்தாவில் கிலோமீட்டர் 17ல் கார் ஒன்று டிரெய்லர் லாரி மீது மோதியதில் ஓர் இல்லத்தரசி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
அதிகாலை 2.25 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், ப்ரோடுவா அல்சாவில் பயணித்த அனைவரும் தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என லிப்பிஸ் மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் அஸ்லி முகமது நூர் கூறினார்.
இறந்தவர்கள் நோர் ஃபைசா ரிட்சுவான் (34), முஹம்மட் ஹாரிஸ் அட்ரியன் முகமட் அஸ்மான் (10) மற்றும் முகமட் ok can ஹஃபி அஸ்மான் (3) ஆகியோர் அவர்.
"கார் ஒரு வளைவு பாதை வழியாகச் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து, எதிர் பாதையில் நுழைந்து டிரெய்லரில் மோதியதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
“கார் டிரெய்லரால் இழுத்துச் செல்லப்பட்டு சாலை இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்கள் தலைநகரில் இருந்து கிளந்தானுக்குப் பயணித்ததாக நம்பப்படுவதாக அஸ்லி கூறினார்.
இந்த சம்பவத்தில் 48 வயதான டிரெய்லர் ஓட்டுநருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக கோலாலிப்பிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1) இன் கீழ் மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- பெர்னாமா




