NATIONAL

டி.என்.பி. நிறுவனத்தின் புதிய தலைவர், தலைமைச் செயல்முறை அதிகாரியாக மெகாட் ஜலாலுடின் நியமனம்

15 டிசம்பர் 2023, 3:08 AM
டி.என்.பி. நிறுவனத்தின் புதிய தலைவர், தலைமைச் செயல்முறை அதிகாரியாக மெகாட் ஜலாலுடின் நியமனம்

கோலாலம்பூர், டிச 15 - தெனாகா நேஷனல் பெர்ஹாட் (டி.என்.பி.)

நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல்முறை அதிகாரியாக

டத்தோ மெகாட் ஜலாலுடின் மெகாட் ஹசான் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனம் எதிர்வரும் 2024 மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு

வருகிறது.

இந்த பதவிக்கு ஜலாலுடினைத் தெனாகா நேஷனல் நிறுவனத்தின் சிறப்பு

பங்குதாரரான நிதியமைச்சு (ஒருங்கிணைக்கப்பட்டது) நியமித்துள்ளது

என்றும் அவரது நியமனம் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 2026 பிப்வரி 29

வரை ஈராண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் மலேசிய பங்குச்

சந்தைக்கு அனுப்பிய குறிப்பில் டி.என்.பி. கூறியுள்ளது.

தற்போது அந்நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரியாக இருந்து

வரும் மெகாட் ஜலாலுடின் (வயது 58) டத்தோ பஹாருடின் டினுக்கு

பதிலாக நியமிக்கப்படுகிறார்.

டி.என்.பி. நிறுவனத்தின் தலைவர், தலைமைச் செயல்முறை அதிகாரி

பதவி மற்றும் அதன் துணை நிறுவனங்களின் இயக்குநர்

பதவிகளிலிருந்தும் டத்தோ பஹாருடின் விலகுவதாக டி.என்.பி.

அறிவித்துள்ளது.

தெனாகா நேஷனல் நிறுவனத்தில் பொறியியல் மற்றும் நிர்வாகம் சார்ந்த

பல்வேறு பொறுப்புகளை ஜலாலுடின் வகித்து வந்துள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.