NATIONAL

ஆசிரியர் ஒருவர் மாணவரிடம் கடுமையாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சகம் விசாரணை

14 டிசம்பர் 2023, 7:49 AM
ஆசிரியர் ஒருவர் மாணவரிடம் கடுமையாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சகம் விசாரணை

கோலாலம்பூர், டிச.14: பள்ளியில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ விழாவின் போது ஆசிரியர் ஒருவர் மாணவரிடம் கடுமையாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பாகக் கல்வி அமைச்சகம் (கேபிஎம்) விசாரணை நடத்தி வருகிறது.

ஆசிரியர்கள் எப்பொழுதும் நெறிமுறைகளைப் பேணவும், கண்ணியம் மற்றும் தொழில் முறையை நிலைநிறுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

“இந்தப் பிரச்சனையை உடனடியாக தீர்க்க முடியுமா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

"கல்வி அமைச்சகம் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த உறுதிபூண்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கோலா திரங்கானுவில், திரங்கானு மாநிலக் கல்வித் துறையின் துணை இயக்குநர் (பள்ளி மேலாண்மைத் துறை) அஸ்மான் உத்மான் @ அப்துல்லா அனைத்து தரப்பினரையும் அமைதியாக இருக்குமாறும், விசாரணையில் தலையிடக்கூடிய நம்பகத்தன்மையற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

"இந்த விவகாரம் இன்னும் விசாரணையில் இருப்பதால் என்னால் மேலும் கருத்து தெரிவிக்க முடியாது. தயவு செய்து அனைவரும் அமைதியாக இருங்கள் மற்றும் உங்கள் சொந்த அனுமானங்களை செய்ய வேண்டாம்," என்று அவர் இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.

ஆசிரியர் ஒருவர் மாணவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதைக் காட்டும் 41 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. மேலும், ஆசிரியரின் செயலில் திருப்தி அடையாத அப்பள்ளியின் மற்றொரு ஆசிரியரால் அந்த வீடியோ பதிவேற்றப் பட்டதாக நம்பப்படுகிறது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.