NATIONAL

பேராக்கில் 20 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்

14 டிசம்பர் 2023, 7:23 AM
பேராக்கில் 20 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்

ஈப்போ. டிச 14: நேற்று மாலை பெய்த கன மழையைத் தொடர்ந்து லாரூட் மாதாங் மற்றும் செலாமாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் தற்காலிகத் தங்கும் மையத்தில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் கம்போங் மாதாங் கெலுகோரில் வசிப்பவர்கள் ஆவர் மற்றும் அவர்கள் மஸ்ஜிட் அல்-வுஸ்தா, பத்து 8யில் உள்ள தற்காலிகத் தங்கும் மையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் (APM) பேராக் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்தது.

இதற்கிடையில், இன்று உலு பேராக் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, சாங்கட் ஜொங்கில் உள்ள பீடோர் ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவைத் (3.57 மீட்டர்) தாண்டியுள்ளதாக publicinfobanjir.water.gov.my இணையதளம் தெரிவித்துள்ளது.

 பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.