ஷா ஆலம், டிச 14 - பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் ஆபத்துகளுக்கு
மத்தியில் மூன்று முக்கிய இலக்குகள் வாயிலாக எதிர்காலச்
சவால்களைச் சமாளிப்பதற்கான திட்டங்களை அமல்படுத்தும் கடப்பாட்டை
நாட்டின் மிகப் பெயரி நீர் விநியோக நிறுவனமான பெங்குருசான் ஆயர்
சிலாங்கூர் சென். பெர்ஹாட் கொண்டுள்ளது.
சுத்திகரிக்கப்படாத நீர் பாதுகாப்பை அதிகரிப்பது, சுத்திகரிக்கப்பட்ட நீரின்
கையிருப்பை உயர்த்துவது மற்றும் வருமானம் தராத நீரின் அளவைக்
குறைப்பது ஆகியவை அந்த மூன்று இலக்குகளாகும் என்று ஆயர்
சிலாங்கூர் நிறுவனத்தின் இடைக்கால தலைமைச் செயல்முறை அதிகாரி
அபாஸ் அப்துல்லா கூறினார்.
அண்மையில் துபாயில் நடைபெற்ற 28வது பருவ நிலை மாற்ற மாநாடு
மீதான ஐ.நா.வின் செயல்வடிவ மாநாட்டையொட்டி வழங்கிய சிறப்பு
பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மலேசியாவில் பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர் கொள்வதற்கு
தயாராக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், கடந்த 2014இல்
ஏற்பட்ட கடும் வறட்சி மற்றும் பெரும் வெள்ளம் மற்றும் 2021இல் ஏற்பட்ட
பெரு வெள்ளம் ஆகியவை ஆயர் சிலாங்கூர் கவனத்தில் கொள்ள
வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும் என்று அவர்
சொன்னார்.
எதிர்காலச் சவால்களைச் சமாளிக்க செயல் திட்டத்தை நாம் ஏற்று
அமல்படுத்துவது அவசியமாகும். நாம் அதிக முன்னுரிமை அளிக்கும்
விஷயங்களில் சுத்திகரிக்கப்படாத நீர் பாதுகாப்ப்பு பிரதானமானதாகும்
என்றார் அவர்.
இரண்டாவதாக, எதிர்வரும் 2030ஆம் ஆண்டிற்குள் நமது நீர் கையிருப்பை
குறைந்த து 20 விழுக்காடாவது அதிகரிக்க வேண்டும். தற்போது நீர்
கையிருப்பு 15 விழுக்காடாக மட்டுமே உள்ளது என்று அவர் சொன்னார்.
தற்போது 28.5 விழுக்காடாக இருக்கும் வருமானம் ஈட்டித் தராத நீரின்
அளவை எதிர்வரும் 2030ஆம் ஆண்டிற்குள் 23.5 விழுக்காடாகக் குறைப்பது
மூன்றாது இலக்காகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.




