NATIONAL

நடப்புக் கல்விக் கொள்கைகள் தொடரும்- புதிய உயர்கல்வி அமைச்சர் ஜாம்ப்ரி கூறுகிறார்

14 டிசம்பர் 2023, 7:00 AM
நடப்புக் கல்விக் கொள்கைகள் தொடரும்- புதிய உயர்கல்வி அமைச்சர் ஜாம்ப்ரி கூறுகிறார்

புத்ராஜெயா, டிச 14 - நாட்டிலுள்ள உயர்கல்விக் கூடங்களை மேலும்

வலுப்படுத்துவதற்கு மாணவர்கள், போதனா பணியாளர்கள் மற்றும்

நிர்வாகத் துறையினர் ஆகிய மூன்று முக்கிய தரப்பின்ர் மீது கவனம்

செலுத்தப்படும் என்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உயர்கல்வி அமைச்சர்

டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காடீர் கூறினார்.

அதே சமயம் தாமும் உயர்கல்வி அமைச்சின் குழுவினரும் முன்னாள்

உயர்கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ முகமது நோர்டின் காலிட் அமல் செய்த

நடப்புக் கல்விக் கொள்கைகளைத் தொடரவுள்ளதாகவும் அவர் சொன்னார்.

நான் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் அணுக்கமாகச்

செயல்படவுள்ளேன். உயர்கல்விக் கூட கூறுகள் ஒரே பிரிவை மட்டும்

உள்ளடக்கவில்லை. உயர்கல்விக் கூடங்களை இயக்குவதில் மாணவர்கள்

போதான பணியாளர்கள் மற்றும் நிர்வாகத் துறையினர் ஆகிய மூன்று

தரப்பினர் முக்கிய பங்கினை ஆற்றுகின்றனர் என்ற அவர் தெரிவித்தார்.

இன்று காலை உயர்கல்வியமைச்சில் தனது வருகையை பதிவு செய்யும்

அடையாள நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம்

அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மனித வள அமைச்சிலிருந்து உயர்கல்வி அமைச்சுக்குப் பணி மாற்றம்

செய்யப்பட்ட துணையமைச்சர் டத்தோ முஸ்தாபா சக்மாட்டும் இன்று

தனது பணியை அதிகாரப்பூர்மாகத் தொடக்கினார்.

அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னர் நேற்று நடைபெற்ற முதலாவது

அமைச்சரவைக் கூட்டம் குறித்த வினவப்பட்ட போது நாட்டை

மேம்படுத்துவதில் அனைத்து அமைச்சர்களும் ஒரே குழுவாக இணைந்து

செயல்பட வேண்டும் என அன்வார் விரும்புவதாக ஜாம்ப்ரி சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.