NATIONAL

கிரேன் விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த இரயில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது

14 டிசம்பர் 2023, 3:23 AM
கிரேன் விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த இரயில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது

கோலாலம்பூர், டிச 14: தஞ்சோங் மாலிம்-கேஎல் சென்ட்ரல்-தஞ்சோங் மாலிம் வழித் தடத்திற்கான அனைத்து ரயில் சேவைகளும் (கேடிஎம்பி, இடிஎஸ்) இரண்டு நாட்களாக ராவாங் மற்றும் குவாங் இடையே கட்டுமான கிரேன் விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

2301 எண் கொண்ட முதல் பயணிகள் ரயில் இன்று காலை 5.05 மணிக்குத் தஞ்சோங் மாலிம் நிலையத்திலிருந்து கேஎல் சென்ட்ரல் வரை இயங்கத் தொடங்கியது என அறிக்கை ஒன்றில் கேடிஎம்பி தெரிவித்துள்ளது.

"நடந்த சம்பவத்திற்குக் கேடிஎம்பி மீண்டும் மன்னிப்பு கேட்கிறது. பாதிக்கப்பட்ட பயணிகளின் ஒத்துழைப்பிற்காக நாங்கள் நன்றி கூறுகிறோம். மேலும், உங்கள் புரிதலையும் பாராட்டுகிறோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்குப் பொதுமக்கள் கேடிஎம்பி பெர்ஹாட் அழைப்பு மையத்தை 03-2267 1200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது கேடிஎம்பியின் அதிகாரப்பூர்வ முகநூல் மூலம் உடனடி பதிலைப் பெறலாம்.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.