புத்ராஜெயா, டிச 14 - இன, சமய பாகுபாடின்றி நாட்டிலுள்ள அனைத்து
தொழிலாளர்களின் கௌவரத்தை உயர்த்த தாம் பாடுபடவுள்ளதாக மனித
வள அமைச்சர் பதவியைப் புதிதாக ஏற்றுள்ள ஸ்டீவன் சிம் சீ கியோங்
உறுதியளித்துள்ளார்.
நாங்கள் தொழிலாளர்களுக்கு பக்கபலமாக இருப்போம் என்று மனித வள
அமைச்சில் நேற்று பணியைத் தொடக்குவதற்கு அடையாளமாக தனது
வருகையைப் பதிவு செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
தெரவித்தார்.
துணை நிதியமைச்சராக பதவி வகித்து வந்த சிம் நேற்று முன்தினம்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த அமைச்சரவை
மாற்றத்தில் வி.சிவக்குமாருக்குப் பதிலாக மனித வள அமைச்சராக
நியமிக்கப்பட்டார்.
முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் தலைவிதி ஒன்றோடொன்று
தொடர்புடையவை எனக் கூறிய சிம், தொழிலாளர்களின் நலன்
காக்கப்படாவிட்டால் நிறுவனத்தின் உற்பத்தி ஆற்றல் பாதிக்கப்படும்
என்றார்.
மலேசியா மடாணி செயல்வடிவத் திட்டத்தின் கீழ் நாட்டின்
பொருளாதாரத்தை மேம்படுத்தும் போது நமது கவனம் பொதுவாகத் திறன்
மேம்பாடு, தொழிலாளர் நலன் மற்றும் உற்பத்தியை மையமாகக்
கொண்டிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
தாமும் துணையமைச்சர் அப்துல் ரஹ்மான் முகமதுவும் அமைச்சின்
பணியாளர்களுடன் இணைந்து முன்பு அமல்படுத்தப்பட்ட திட்டங்களைத்
தொடரும் அதேவேளையில் எதிர்காலத்திற்கான புதியத் திட்டங்களையும
வரையவுள்ளதாக அவர் சொன்னார்.




