NATIONAL

ஜொகூர் சுல்தானின் பரிந்துரையைப் பரிசீலிக்கலாம் - ஆனால், அரசியலமைப்புச் சட்டம் நிலை நிறுத்தப்படும்

13 டிசம்பர் 2023, 4:09 AM
ஜொகூர் சுல்தானின் பரிந்துரையைப் பரிசீலிக்கலாம் - ஆனால், அரசியலமைப்புச் சட்டம் நிலை நிறுத்தப்படும்

கோலாலம்பூர், டிச 13 - கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம், நாடாளுமன்ற

ஜனநாயகம் மற்றும் முடியாட்சி அரசியலமைப்புக் கோட்பாடுகளை

புறக்கணிக்காத வகையில் எந்தவொரு கண்ணோட்டம் மற்றம்

பரிந்துரையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்று பிரதமர்

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) மற்றும் பெட்ரோனாஸ்

நிறுவனத்தை நேரடியாக கண்காணிக்கும அதிகாரம் உள்ளிட்ட

பொறுப்புகள் மாட்சிமை தங்கிய பேரரசருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற

ஜொகூர் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் அல்மார்ஹூம் சுல்தான்

இஸ்கந்தாரின் பரிந்துரையும் இதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

நாம் விவாதிக்க தயாராக உள்ளோம். எனினும், அரசியலமைப்பு

கோட்பாடுகள், நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு

முடியாட்சி தற்காக்கப்பட வேண்டும் என்பதோடு நாம் அந்த

கோட்பாடுகளை நிலை நிறுத்துகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகவே. ஜொகூர் சுல்தான் உள்பட எந்த தரப்பினரிடமிருந்தும் வரும்

அறிக்கைகள் மற்றும் கண்ணோட்டங்கள் குறித்து யாரும் கவலையடையத்

தேவையில்லை என அவர் சொன்னார்.

இத்தகைய கண்ணோட்டங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் அவை, தேசிய கொள்கைகள் மற்றும் அரசியலமைப்பு

முடியாட்சியின் கோட்பாடுகளைப் பாதிக்காது என்றார் அவர்.

எம்.ஏ.சி.சி. மற்றும் பெட்ரோனாஸ் விவகாரம் தொடர்பில் சுல்தான்

இப்ராஹிம் தெரிவித்த கருத்தில் தாம் முரண்படுவதாக முன்னாள் பிரதமர்

துன் டாக்டர் மகாதீர் முகமது வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அன்வார்

இவ்வாறு தெரிவித்தார்.

துன் மகாதீர் தனது கருத்தை வெளியிடுவதில் தங்களுக்கு எந்த

ஆட்சேமும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.