NATIONAL

ஐ.ஜே.என். புதிய தலைவராக டாக்டர் நோர் ஹிஷாம் நியமனம்

13 டிசம்பர் 2023, 3:07 AM
ஐ.ஜே.என். புதிய தலைவராக டாக்டர் நோர் ஹிஷாம் நியமனம்

கோலாலம்பூர், டிச 13 -  சுகாதாரத் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தின் (ஐ.ஜே.என்.) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம்  டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சுகாதாரத் துறையில் உயர் பதவிகளை வகித்ததன் மூலம் பெற்ற பழுத்த அனுபவத்துடன் வரும் டாக்டர் நோர் மூலம், தனது நோயாளிகளுக்குத் தனித்துவமான மருத்துவச் சேவை மற்றும் புத்தாக்க கண்டு பிடிப்புகளை வழங்குவதில் நடப்பு அத்தியாயத்தின் அடையாளமாக இந்த நியமனம் விளங்குகிறது என்று ஐ.ஜே.என்.அறிக்கை ஒன்றில் கூறியது.

மேலும் சுகாதாரத் துறையில் புதிய தலைவருக்கு உள்ள  அனுபவம், நிறுவனத்தின் தொடர்ச்சியான வெற்றிக்கு பெரும் சொத்தாக விளங்கும் இருக்கும் என்றும் ஐ.ஜே.என். நம்புகிறது.  அவரது குறிப்பிடத்தக்க ஆளுமை, நிர்வாகத் திறன்கள் மற்றும் நோயாளிகளை மையமாகக் கொண்ட  அவரது அர்ப்பணிப்பு ஆகியவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மேலும் துணை புரியும்.

டாக்டர் நூர் ஹிஷாம் ஐ.ஜே.என். இல் எங்களுடன் இணைந்து புதிய பங்கை வகித்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது தொலைநோக்கு பார்வை ஐ.ஜே.என். ஐ அதிக உயரத்திற்கு கொண்டு செல்ல உதவும் என்று நான் நம்புகிறேன் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ டாக்டர் அய்சாய் அசான் அப்துல் ரஹீம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.