NATIONAL

தண்டவாளத்தின் அருகே கிரேன் விழுந்ததால் கேடிஎம்பி மற்றும் இடிஎஸ் சேவைகள் பாதிப்பு

13 டிசம்பர் 2023, 2:25 AM
தண்டவாளத்தின் அருகே கிரேன் விழுந்ததால் கேடிஎம்பி மற்றும் இடிஎஸ் சேவைகள் பாதிப்பு

கோலாலம்பூர், டிச 13: நேற்று கெரேதாப்பி தனா மெலாயு பெர்ஹாட் (கேடிஎம்பி) லெம்பா கிளாங் மற்றும் மின்சார ரயில் (இடிஎஸ்) சேவைகள் தண்டவாளத்தின் அருகே கிரேன் விழுந்ததால் தடை ஏற்பட்டது.

இருப்பினும், சம்பவம் நடந்த இடத்தைக் கேடிஎம்பி அறிக்கையில் குறிப்பிடவில்லை. மேலும் இந்த சம்பவத்தால் ரவாங்-தஞ்சோங் மாலிம் வழித் தடத்திற்கான இரண்டு தடங்களும் தடைப்பட்டது என்று விளக்கியது.

அச் சம்பவத்தைத் தொடர்ந்து, தஞ்சோங் மாலிம்-கேஎல் சென்ட்ரல்-தஞ்சோங் மாலிம் செல்லும் பயணிகளின் சேவை செரெண்டாவில் நிறுத்தப்படும். அதே நேரத்தில் இடிஎஸ் சேவை பின்னர் அறிவிக்கப்படும்.

"இந்த சம்பவத்தைச் சரி செய்ய நேரம் தேவை. ஏனெனில் மேல்நிலை லைன் உபகரணங்கள் செயலிழந்துள்ளன" என்று அறிக்கை கூறுகிறது.

இதனால், ``Klang Valley Komuter`` சேவையைப் பயன்படுத்தும் பயணிகளுக்குச் சுங்கை பூலோவிலிருந்து செரெண்டாவிற்குச் சுற்றுப் பயணப் பேருந்து சேவையை கேடிஎம்பி வழங்குகிறது. கேஎல் சென்ட்ரல்-சுங்கை பூலோ-தஞ்சோங் மாலிம் வழி இடிஎஸ் பயணிகளுக்கானது.

"சூழ்நிலையின் சமீபத்திய முன்னேற்றங்களை அவ்வப்போது கேடிஎம்பி தெரிவிக்கும் மற்றும் சிரமத்திற்கு மன்னிக்கவும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.