ஷா ஆலம், டிச13: ஹோட்டல் அல்லது சொகுசு இடங்களில் மாணவர் பட்டமளிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்பு பள்ளிகள் பெற்றோர்களுடன் கலந்துரையாட வேண்டும்.
எந்தவொரு நிகழ்வையும் நடத்துவதற்குப் பள்ளிக்கு தன்னாட்சி அதிகாரம் இருந்தாலும், பெற்றோருக்குச் சுமையாக இருப்பதைத் தவிர்க்கும் நடவடிக்கை குறித்து கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் விளக்கினார்.
"எந்தவொரு நிகழ்வையும் ஏற்பாடு செய்வது தொடர்பான விவாதங்கள் பெற்றோர் அல்லது பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கம் இடையே நடத்தப்பட வேண்டும்.
"பெற்றோரின் சூழ்நிலைக்கு ஏற்பவும், பரஸ்பரம் ஒப்புக்கொள்ளும் விதமாகவும் விழா நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அவர் சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையத்தில் கூறினார்.
நூற்றுக்கணக்கான ரிங்கிட் கட்டணத்துடன் ஹோட்டல்களில் பள்ளி விழாக்களை நடத்தும் போக்கு, பெற்றோருக்குச் சுமையாக இருப்பது குறித்து அவர் ஊடகங்களில் கருத்து தெரிவித்தார்.
எனவே, இவ்விவகாரம் இரு தரப்பினருக்கும் இடையே பகுத்தறிவுடன் தீர்க்கப்படும் என்று ஃபத்லினா நம்புகிறார்.
"எதிர்காலத்தில் மீண்டும் பிரச்சனை எழுவதைத் தவிர்க்க கலந்துரையாடல் சிறந்த வழியாகும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.




