NATIONAL

புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துக்கள்! எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி- வ. சிவகுமார் அறிவிப்பு

12 டிசம்பர் 2023, 11:31 AM
புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துக்கள்! எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி- வ. சிவகுமார் அறிவிப்பு

புத்ரா ஜெயா, டிச 12- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அமைச்சரவை மாற்றத்தை அறிவித்துள்ளார். இதில் எனக்கு பதிலாகச் சகோதரர் ஸ்டீவன் சிம் புதிய மனிதவள அமைச்சராக இடம் பெற்றுள்ளார்.

அவர் உட்பட புதிதாக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் புதிய அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மனிதவள அமைச்சராக பணியாற்றிய இந்த ஓர் ஆண்டு காலத்தில் எனக்கு முழு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.