NATIONAL

மூதாடியிடமிருந்து திருடப்பட்ட 515,000 வெள்ளியைப் பெற்றதாக வணிகர் மீது குற்றச்சாட்டு

12 டிசம்பர் 2023, 11:27 AM
மூதாடியிடமிருந்து திருடப்பட்ட 515,000 வெள்ளியைப் பெற்றதாக வணிகர் மீது குற்றச்சாட்டு

மூவார், டிச 12- திருடப்பட்டதாக கூறப்படும் மூதாட்டி ஒருவருக்குச்

சொந்தமான 515,000 வெள்ளிக்கும் மேற்பட்டத் தொகையைப் பெற்றதாகச்

சுமத்தப்பட்ட பத்து குற்றச்சாட்டுகளை வணிகர் ஒருவர் மறுத்து

விசாரணை கோரினார்.

மஞ்சிட் கவுர் ஷிரான் சிங் (வயது 72) என்ற மூதாட்டிக்குச் சொந்தமான

வெ.515,523.80 தொகையை இங்குள்ள ஜாலான் சுலைமானில் உள்ள

சி.ஐ.எம்.பி. வங்கிக் கிளையில் பத்து பரிவர்த்தனைகள் மூலம்

நேர்மையற்ற முறையில் பெற்றதாக முகமது ஃபைருஸ் முகமது நோர்

(வயது 36) குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதிக்கும் 2019ஆம் ஆண்டு

டிசம்பர் 26ஆம் தேதிக்கும் இடையே இக்குற்றத்தை புரிந்ததாக முகமது

ஃகைருசுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகமது ஃபைருஸ் பெயரி பதிவு செய்யப்பட்ட அந்த வங்கிக் கணக்கில்

அப்பணம் வைக்கப்பட்டிருந்ததோடு அது திருட்டுப் பணம் என்பது

அவருக்கு தெரியும் என நம்புவதற்கும் வலுவான காரணங்கள் உள்ளதாக

நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு வரையிலான

சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை

செய்யும் குற்றவியல் சட்டத்தின் 411வது பிரிவின் கீழ் அவர்

குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட முகமது ஃபைருஸை ஒரு நபர் உத்தரவாதத்துடன்

7,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட்

ஃபாத்தின் டாலியா காலிட், வழக்கு விசாரணையை வரும் ஜனவரி மாதம்

14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.