செய்தி ;சு. சுப்பையா
பந்திங்.டிச.10- பந்திங் சட்டமன்ற தொகுதியில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினரான பாப்பாராயிடு தலைமை தாங்கினார்.
பந்திங் நகரில் உள்ள அவரது சேவை மையத்தின் முன்புறம் நடைபெற்ற இவ்வுபசரிப்பின் இடை இடையே மழை தூறினாலும் பல்லின மக்கள் திரண்டு வந்து கலந்துக்கொண்டனர்..
சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் என மூவின மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோல லங்காட் பி.கெ.ஆர் தலைவர் ஹரிதாஸ், ஜ.செ.க. தலைவர்கள், அமானா கட்சித் தலைவர்கள், தேசிய முன்னணித் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட 400 பேருக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கி சிறப்பித்தார். மேலும் சிறப்பு அதிர்ஷ்ட குழுக்கு 40 பரிசுகள் வழங்கப்பட்டன.
பந்திங் வட்டாரத்தில் சட்டமன்ற உறுப்பினரால் நடத்தப் படும் முதல் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு என பாப்பாராயிடு தெரிவித்தார்.
கோல லங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர்கள், இந்திய சமுதாய தலைவர்கள், பி.கெ.ஆர் மற்றும் ஜ.செ.க. கட்சிகளின் தலைவர்களும் திரளாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலை நிகழ்ச்சியும் உடன் நடை பெற்றன. இந்திய பாரம்பரிய உணவு வழங்கப் பட்டன.
நண்பகல் 1.00 தொடங்கி பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற்ற இதை பந்திங் சட்ட மன்ற அலுவலகம் மற்றும் கட்சித் தலைவர்கள் பேராதரவுடன் நடைபெற்றதாக பாப்பா ராயுடு தெரிவித்தார்.








