ALAM SEKITAR & CUACA

பாசீர் மாஸில் உள்ள நான்கு வெள்ள நிவாரண மையங்களில் 711 பேர் தஞ்சம்

9 டிசம்பர் 2023, 6:03 AM
பாசீர் மாஸில் உள்ள நான்கு வெள்ள நிவாரண மையங்களில் 711 பேர் தஞ்சம்

கோத்தா பாரு, டிச.9- பாசீர் மாஸ் மாவட்டத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 10 மணி நிலவரப்படி 229 குடும்பங்களைச் சேர்ந்த 711 பேராக உள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் மாவட்டத்தில் உள்ள நான்கு தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளதாக   சமூக நலத்துறையின்  பேரிடர் தகவல் செயலி கூறியது.

குவால் தோ டே தேசியப் பள்ளியில்  112 குடும்பங்களைச் சேர்ந்த 338 பேரும் குவால் பெரியோக் தேசிய இடைநிலைப் பள்ளியில்  21 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ளேலும், பாரோ பியால் தேசியப் பள்ளியில்  55 குடும்பங்களைச் சேர்ந்த 167 பேரும்  குவால் பெரியோக் தேசியப் ஆரம்பப் பள்ளியில்  41 குடும்பங்களைச் சேர்ந்த 136 பேரும் அடைக்கலம் நாடியுள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.