NATIONAL

காணாமல் போன மாணவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியைக் காவல்துறை நாடுகிறது

8 டிசம்பர் 2023, 10:25 AM
காணாமல் போன மாணவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியைக் காவல்துறை நாடுகிறது

கோலாலம்பூர், டிச 8- நேற்று முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 14 வயது மாணவரைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

முகமது டேனியல் அக்மால் ஸூல்கைரி என்ற மாணவர் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் ஜாலான் யாக்கோப் லத்தீப்பில் உள்ள ஆலம் ஷா  அறிவியல் இடைநிலைப் பள்ளித் திடலில் இறுதியாகக் காணப்பட்டதாக செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜாம் ஹலீம் ஜமாலுடின் கூறினார்.

அம்மாணவர் காணாமல் போனது தொடர்பில் அதே நாள் மதியம் 1.21 மணிக்கு  காவல்துறைக்கு புகார் கிடைத்தது  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அம்மாணவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால்  அருகில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது செராஸ் காவல்துறையின் ஹாட்லைன் எண் 03-9284 505/ 5051 அல்லது கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் 03-2115 9999 என்ற எண்ணில் அழைக்குமாறு ஜாம் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.