NATIONAL

டிரெய்லருடன் கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்

8 டிசம்பர் 2023, 2:55 AM
டிரெய்லருடன் கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்

ஈப்போ, டிச 8: கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 20ல், (கெரிக் நோக்கிய தாசிக் பண்டிங் செல்லும் பாதை) மரத்தூள் ஏற்றிச் சென்ற டிரெய்லருடன் கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

மாலை 5.17 மணிக்குப் பதிவான இந்தச் சம்பவத்தில், 30 வயதுக்குட்பட்ட இருவர், புரோட்டோன் வீரா வாகனத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது என பேராக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.

"தீயணைப்பு வீரர்கள் மீட்பு உபகரணங்களை (ஹைட்ராலிக் கட்டர்கள்/ஸ்ப்ரேடர்கள்) பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை அகற்றினர்.

உயிரிழந்த இருவரின் உடல்களும் மேல் நடவடிக்கைகளுக்காகக் கெரிக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அதேவேளை டிரெய்லர் ஓட்டுநருக்கும் மற்றும் உதவியாளருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் சபரோட்ஸி கூறினார்.

இரவு 7.39 மணி அளவில் சோதனை நடவடிக்கை முடிவடைந்தது.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.