ECONOMY

மலேசியா 10 ஆண்டுகளில் ஆக உயர்ந்த 22,500 கோடி முதலீட்டை இப்பொழுது பதிவுசெய்துள்ளது -

7 டிசம்பர் 2023, 5:48 AM
மலேசியா 10 ஆண்டுகளில் ஆக உயர்ந்த 22,500 கோடி முதலீட்டை இப்பொழுது பதிவுசெய்துள்ளது -

கோலாலம்பூர், 7 டிச: இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (எம்ஐடிஐ) அங்கீகரித்த மொத்த முதலீட்டு மதிப்பு RM 22,500 கோடி ஆகும். இது  கடந்த பத்து ஆண்டுகளில் மலேசியாவின் மிக உயர்ந்த மற்றும் சிறந்த சாதனைகளில் ஒன்றாகும்.

இந்த சாதனை மலேசியாவின் தொடர்ச்சியான கவர்ச்சியையும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் முதலீட்டுத் தளமாக நிரூபித்துள்ளது என்று அமைச்சர் துங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கூறினார்.

"அந்நிய நேரடி முதலீடு (FDI) மற்றும் உள்நாட்டு நேரடி முதலீடு (DDI) விகிதம் ஏறக்குறைய அதே எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது, இது இந்த ஆண்டின் ஒன்பது மாதங்களில் FDI க்கு 56 சதவிகிதம் மற்றும் DDI க்கு 44 சதவிகிதம் ஆகும்" என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்

இந்த ஆண்டு அரசாங்க முதலீட்டு பயணங்களின்  வழி  பெறபட்ட  மொத்த முதலீட்டு மதிப்பு RM34700 கோடி  ஆகும்

அவை,   சீனா RM17000 கோடி  ;    யுனைடெட் ஸ்டேட்ஸ் (APEC) (RM6300 கோடி);

அபுதாபி (RM4060 கோடி );     தென் கொரியா (RM2400கோடி ); ஜப்பான் (RM2310கோடி); 

சிங்கப்பூர் (RM1300  கோடி );  புருனை (RM500 கோடி);  அமெரிக்கா (UNGA) (RM474 கோடி); இத்தாலி (RM330 கோடி);  இந்தோனேசியா (RM30 கோடி);  மற்றும் வியட்நாம் (RM0.5 கோடி) க்கான  வாக்குறுதிகள் பெறபட்டன.  

 

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.