NATIONAL

மின்னல் தாக்கியதில் எட்டு வயது சிறுவன் உடல் முழுவதும் தீக்காயங்களுக்குள்ளானான் 

5 டிசம்பர் 2023, 7:50 AM
மின்னல் தாக்கியதில் எட்டு வயது சிறுவன் உடல் முழுவதும் தீக்காயங்களுக்குள்ளானான் 

கங்கார், டிச.5: நேற்று இரவு மின்னல் தாக்கியதில் கம்போங் பெர்மாதாங் கெரிசெக், சிம்பாங் எம்பாட் என்ற இடத்தில் எட்டு வயது சிறுவன் உடல் முழுவதும் தீக்காயங்களுக்குள்ளானான்.

இரவு 7 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது முகமது அஜிசுல் ஜாஃபர் மற்றும் அவரது தாயார் நோர் லெலாவதி அபு பக்கார் (39), அண்டை வீட்டில் இருந்து தங்கள் வீட்டிற்கு திரும்ப நடந்து வந்து கொண்டிருந்தனர் என கங்கார் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி யுஷரிபுடின் முகமட் யூசோப் தெரிவித்தார்.

இதில் நோர் லெலாவதிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

"இச்சம்பவம் மழை பெய்து கொண்டிருந்த போது நிகழ்ந்துள்ளது," என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் தற்போது அலோர்ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக யுஷாரிபுடின் கூறினார்.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.