ஜோர்ஜ் டவுன், டிச 4: நேற்று முன்தினம் பயான் பாருவில் உள்ள குயின்ஸ்பே கடற்கரையில் பெண் குழந்தையின் சடலம் ஒன்று கரையோரப் பகுதியில் ஒதுங்கியது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மாலை 5.55 மணியளவில் அக்குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்து தனது தரப்புக்குத் தகவல் கிடைத்தது என தென்மேற்கு மாவட்டக் காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் கமருல் ரிசால் ஜெனால் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தையின் உடல் கடற்கரையின் கரையோரம் வரை நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
"குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது மற்றும் குற்றவியல் சட்டப் பிரிவு 318 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகிலுள்ள காவல்நிலையத்திற்குச் சென்று விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.
– பெர்னாமா




