கோலாலம்பூர், டிச 4: சமூக ஊடக தளங்களில் பொறுப்பற்ற தரப்பினரால் மேற்கொள்ளப்படும் இ-மடாணி கிரெடிட் டைப் பண அல்லது 'பியேர்-டு-பியேர்' பரிமாற்றங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்குமாறு நிதி அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.
இதற்கு காரணம் பயனாளிகள் மோசடிக்கு உள்ளாகுவதையும் அவர்கள் பெற்ற இ-மடாணி கிரெடிட் இழப்பதையும் தடுப்பதற்கு ஆகும் என நிதி அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்தது.
'பியேர்-டு-பியேர்' பரிமாற்றம் அல்லது இ-மடாணி கிரெடிட் டைப் பணமாகத் திரும்பப் பெறுதல் காரணமாக இழப்பு ஏற்பட்டால் நிதி அமைச்சகம் பொறுப்பேற்காது.
'பியேர்-டு-பியேர்' பரிமாற்றம் அல்லது பணமாகப் பெறுதல் தொடர்பான வழக்குகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்ட கணக்குகளைத் தடுப்பது மற்றும் இ-மடாணி பெறுநர்களின் கிரெடிட்டைப் பறிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும்" என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காகவும், பணமில்லா கட்டண கலாச்சாரத்தை வளர்ப்பதற்காகவும் இ-மடாணி திட்டம் தொடங்கப்பட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"எனவே, இ-மடாணி கிரெடிட்டை 'பியேர்-டு-பியேர்' பரிமாற்றங்களுக்கோ அல்லது பணமாகத் திரும்பப் பெறுவதற்கோ பயன்படுத்த முடியாது.
MAE, Setel, ShopeePay மற்றும் Touch 'n Go eWallet அல்லது QR DuitNow ஆகிய 1.8 மில்லியன் சில்லறை விற்பனையாளர்கள் அல்லது நாடு முழுவதும் உள்ள வணிகங்களில் ஈடுபட்டுள்ள மின்-வணிகங்கள் மூலம் மட்டுமே இ-மடாணி கிரெடிட்டைப் பயன்படுத்த முடியும்.
"இ-மடாணி திட்டத்திற்கான பதிவு இன்று முதல் பிப்ரவரி 20, 2024 வரை திறந்திருக்கும். மேலும் B40 மற்றும் M40 குழுக்கள் உட்பட தகுதியான 10 மில்லியன் பெரியவர்கள் பயனடைவார்கள்" என்று அவர் கூறினார்.
https://manfaat.mof.gov.my/




