ALAM SEKITAR & CUACA

உலு சிலாங்கூரில் இன்றிரவு  வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்

3 டிசம்பர் 2023, 10:47 AM
உலு சிலாங்கூரில் இன்றிரவு  வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்

ஷா ஆலம், டிச 3- உலு சிலாங்கூரில் இன்றிரவு  வரை  இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது.

பினாங்கு மற்றும் கெடா, பேராக், பகாங், ஜோகூர், சரவாக் மற்றும் சபாவில் உள்ள பல மாவட்டங்களிலும் இதே வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய கனமழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லிமீட்டருக்கு அதிகமாக இருக்கும் போது இந்த  எச்சரிக்கைகள் வழங்கப்படுகிறது.  இது  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழும் போது இந்த எச்சரிக்கை வழங்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.

வானிலை தொடர்பான சமீபத்திய தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளம் அலலது சமூக ஊடகங்களை பார்வையிடலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.