ECONOMY

தமிழ் - சீனப் பள்ளிகள் குறித்து இனியும் கேள்வி எழுப்ப தேவையில்லை! அமைச்சர் சிவகுமார்

3 டிசம்பர் 2023, 2:05 AM
தமிழ் - சீனப் பள்ளிகள் குறித்து இனியும் கேள்வி எழுப்ப தேவையில்லை! அமைச்சர் சிவகுமார்

கோலாலம்பூர், டிச 3-  சீன, தமிழ் தேசிய வகைப் பள்ளிகள் சட்டப்பூர்வமானவை மற்றும் மலேசிய அரசியலமைப்பு படி  அவை  தொடர்ந்து செயல்படும் என்று புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பானது இனியும்  அது குறித்து கேள்வி எழுப்ப தேவையில்லை என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

இந்நாட்டில் தாய்மொழி பள்ளிகளை களையெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும் தாய்மொழி பள்ளிகள் சட்டப்பூர்வமானவை என்று நீதிமன்ற தீர்ப்பு அதிரடி தீர்ப்பாகும்.

ஆகவே தமிழ்ப் பள்ளிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையேதமிழ் பள்ளிகளுக்கு  மானியம் தொடர்ந்து  வழங்கப்படுகிறது. முழு உதவி பெற்ற தமிழ்ப் பள்ளிகள் மற்றும் பகுதி உதவி பெறும் தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசாங்கம் எப்போதும் பக்க பலமாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றிரவு புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற 25 ஆம் ஆண்டு விருந்தளிப்பு விழாவில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.