NATIONAL

பெண் ஒருவர் தனது வளர்ப்புத் தந்தையால் தொடர்ந்து இரண்டு வாரங்கள் பாலியல் கொடுமை செய்யப்பட்டார்

1 டிசம்பர் 2023, 4:02 AM
பெண் ஒருவர் தனது வளர்ப்புத் தந்தையால் தொடர்ந்து இரண்டு வாரங்கள் பாலியல் கொடுமை செய்யப்பட்டார்

ஷா ஆலம், டிச. 1: சுங்கை திங்கி கானன், தஞ்சோங் காராக்கில் உள்ள வீடொன்றில் 19 வயது பெண் ஒருவர் தனது வளர்ப்புத் தந்தையால் தொடர்ந்து இரண்டு வாரங்கள் பாலியல் கொடுமை செய்யப்பட்ட அவலம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் 41 வயது தாயார் இச்சம்பவம் குறித்த காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு, அச்செயல் கண்டு பிடிக்கப்பட்டதாகக் கோலா சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் ரம்லி காசா கூறினார்.

"பின்னர், பாதிக்கப்பட்ட பெண் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார், மேலும் அவர் பாலியல் கொடுமை செய்யப் பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது," என்று அவர் கூறினார்.

தலைமறைவான சந்தேக நபர் நவம்பர் 26 அன்று ஜொகூரில் உள்ள ஶ்ரீ ஆலம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும், குற்றவியல் சட்டத்தின் (கே.கே) பிரிவு 376 (பி)இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப் பட்டதாகவும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.